ஆவாரைப் பிசின் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

பெருநீர் மறிக்கும் பிரமேகம் போக்கும்
வருநீர்ச் சுறுக்குதனை மாற்றுந் - தருநீர்மை
பூணுமே னிக்கமலப் பொன்னே பிடகரெலாம்
பேணு,மே காரிப் பிசின்

- பதார்த்த குண சிந்தாமணி

ஆவாரைச் செடியின் பிசின் வெகுமூத்திரம், பிரமேக நோய், வாதகிரீச்சரம், எரிச்சல் இவற்றைப் போக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Sep-21, 8:42 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே