கன்னியிவள் இடை

(வல்லினம் )

அகர்முகப் பொழுதின் கனவில்
நிகர்முக நிலவாய் வந்தாள் !
செதுக்கிய சிலையாக உருவமவள்
எடையில்லா வடிவழகி இடையழகி !
​​கண்டதும் கன்னியை ஒருநொடியில்
இடம்பெயர்ந்தது நெஞ்சம் தடுமாறி ​!
இதமானது சூழலும் உள்ளத்தில்
பதமான இடைதனை நோக்கியதும் !
​தாபங்கள் வழிகின்ற நிலையானது
கவர்ந்திட்டக் கன்னியின் அழகானது !​
​​மறக்கவும் முடியாத மங்கையினால்
உறங்கவும் இயலாத இரவானது ​!

(மெல்லினம்)

பூங்காற்று​ சுகம்தரும் சுந்தரயிடை
தங்கமாய்​ ஒளிரும் கொடியிடை !
தஞ்சம் அடைந்திடும் எவருமுள்ளமும்
நெஞ்சம் படபடக்கும் இடையழகால் !
கண​நேரம் கண்டால் மெல்லிடையை ​
​குணவதியின் அதிசயம் புரிந்திடும்​!
​சடையழகு இடையழகு உடையழகால்
சந்தடி​கள் செவிப்பறையில் நுழையாது !
பூமகளின் தோற்றம் நிலைமறக்கும்
​கோமகளின் கோலம் செயலிழக்கும் !
​மனதளவில் மாற்றிடும் ​மன்மதனாய் ​
உள்ளத்தில் உவகைப் பெருக்கெடுக்கும் !

( இடையினம்)

​காயம்பட்ட நெஞ்சமும் ஆறிடும் !
​வேங்கையின் வேகத்தை விஞ்சிடும் !
சரசரவென விழுந்திடும் சொற்கொண்டு
சரமெனத் தொடுத்திடும் கவிமலர்களை !
இலட்சியமாக கொள்ளும் இதயங்கள்
இலயித்திடும் மனங்கள் மங்கையிடம் !
துவண்டிடும் காலத்தில் தேற்றிவிடும்
துடைத்திடும் துயரத்தை இடையழகும் !
அழுகின்ற இதயமும் ஆனந்தமாகும்
எழுகின்ற உணர்வுகள் உருவமாகும் !
​களம்காண ஆவலுடன் எழுதினேன்
​உளமார உள்ளத்தில் தோன்றியதை !


​( அகர்முகம் = விடியற்காலை ​​)​


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (16-Sep-21, 2:33 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 331

மேலே