வேண்டாம் இந்த இளமை

பசியுடன்
பல நாள்
போராடலாம்...
ஆனால்

இடையில்
ஒரு நாள்
பசியாறி,
பின்பு போராடுவது தான்
கொடுமையின்
கொடுமை....

எப்படியிருக்கும் இனிமை
என்று
கண்டுகொண்ட பின்
கசப்பை
அனுபவிப்பது
அத்தனை
சாதாரணமானதா....?

இனிப்பிற்கு
பயப்படுவது
கசப்பின் கணிப்பிற்கு
பயந்தே....

பரிமாற காத்திருந்தபோது,
பசியாற காத்திருந்தவன்
பசியாறுவது காலதேவனால்
என்றால்
எதற்கு எனக்கு
ஏழ்பிறப்பு....?

தனிமை
கொடூரமானதல்ல,
உறவின் ருசி
அறியும் வரை....

பூச்சூட வந்தவனை
பூமி சூடினால்,
அது
பூவின் தவறா...?
இருந்தாலும்,

அவனில்லா வாழ்வு
அவனியில் வேண்டாம்
எனக்கு...

அத்தனை
கொடுமையல்ல,
முதுமையில்
தனிமை..
ஆனாலும்,

இளமையில்
வறுமையல்ல,
இளமையில்
தனிமை
அத்தனை கொடூரம்.
எனவே

வேண்டாம்
இந்த
இளமை
எனக்கு....




✍️கவிதைக்காரன்


(சொல்ல தயக்கம், ஆனாலும் சரியாக தலைப்பிட்டால் தான் புரியும் என நீங்கள் அடம் பிடித்தால்,
சொல்லி விடுகிறேன்,
இதன்
தலைப்பு

ஒரு விதவையின் குமுறல்)

எழுதியவர் : கவிதைக்காரன் (16-Sep-21, 6:54 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
பார்வை : 190

மேலே