சமையலறை மரித்த கவிதை
உப்பு....
புளி...
கவிதைக்கும்
இதற்கும்
என்ன சம்பந்தம்?
இருக்கிறதே....
என் வீட்டு
சமையலறைக்குள்
பல கவிதைகளை
புதைத்திருக்கிறேன்...
நேற்று
மீன் குழம்புக்கு
புளி கரைக்கும் போது
தோன்றியது
ஒரு கவிதை.
ஆனால்
குழம்பு
கொதித்ததில்
ஆவியானது
என்
கவிதை...
இன்றும் கூட
.ஆவியான கவிதை
காற்றில்
அங்கேயே
சுற்றிக்கொண்டிருக்கலாம்.
என்னை விட்டு எங்கே போகும்
இறந்து போன
என் கவிதை...?
கவிதைக்காரிகளின்
சமையலறை
பல கவிதைகளை
புதைத்த
சுடுகாடு....
✍️ தீபிகா.