அவள் செம்பருத்தி

கண்களும்
கன்னங்களும்
ஏன் துடிக்கின்றன

நுனி மூக்கு ஏன்
சிவக்கிறது

உதடுகளும் இமைகளும்
ஏன் பரபரக்கின்றன

இதயம் ஏன் வேகமாய்
அடித்துக்கொள்கிறது

தேன்பருக இவ்வளவு
அவசரம் ஏன் என

எந்த மலரும் இத்தனை
கேள்விகள்
கேட்டதில்லை என்னிடம்

நீ மட்டும் ஏன் செம்பருத்தி
தடுமாற வைக்கிறாய்

இவ்வளவு திறந்த மனம்
இருந்தும் மஞ்சள் இருந்தும்
மகரந்த செழிப்பிருந்தும்

மறுப்பதேன் செம்பருத்தி
மழைக்கான நேரம்
இன்றைய பொழுதில்லையோ...

எழுதியவர் : மேகலை (17-Sep-21, 10:02 pm)
சேர்த்தது : மேகலை
Tanglish : aval semparuthi
பார்வை : 76

மேலே