அறங்கேள்வி யாலாம் பயனென் றுரைப்பார் – அறநெறிச்சாரம் 10

நேரிசை வெண்பா

புல்ல வுரைத்தல் புகழ்தல் பொருளீதல்
நல்ல ரிவரென்று நட்பாடல் - சொல்லின்
அறங்கேள்வி யாலாம் பயனென் றுரைப்பார்
மறங்கேள்வி மாற்றி யவர் 10

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

சொல்லுமிடத்து, பாவத்தன்மையை அறநூல்களைக் கேட்டலால் மாற்றிய பெரியோர்கள் பலரும் தம்மை அடையுமாறு சொல்லுதலும், பலரானும் புகழப்படுதலும், பொருள் ஈயப்படுதலும், இவர் நல்லவரென்று கருதிப் பலரும் நட்பினராக வந்தடைதலுமாகிய இவற்றை அந்நூல்களைக் கேட்பதனால் வரும் பயனென்று சொல்லுவார்கள்.

குறிப்பு:

புல்ல வுரைத்தல் மூன்றும் அறவுரையை அறிந்தமையாலாம் பயனாம். மாற்றியவர் உரைப்பர் எனமுடிக்க.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Sep-21, 10:19 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 39

மேலே