பழஞ் சோற்றுத் தண்ணீர்

பழஞ் சோற்றுத் தண்ணீர்.

வயல்வெளி ஓரத்தில்
கோவில் கொண்ட,
சண்டியூர் கண்ணகியே!

இந்தப் பனிக் குளிர் வேளையில்,
ஏரிக் கரை ஓரமாகவே
செல்வது எங்கே?
நானும் வாரேன்
கொஞ்சம் நில்.

அதோ தெரியுதே
அந்தப் பக்கம்,
அதுவே என் குடிசை,
அப்புறம் என் குடிசை
வருவாயானால்!

நடந்த களைப்பாற,
பழைய சோற்றுத்
தண்ணீரும் மோரும்
தந்திடுவேன்,
அருந்தியே நீ
மகிழந்திடலாம்.

காத்திருப்பேன்!
மறவாமல் வரவேண்டும் என் குடிசை.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : (19-Sep-21, 5:55 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 50

மேலே