ஏற்றுக் கொள்

"கண்ணுக்குத் தெரியாத கருவை கண்ணும் கருத்துமாய் காத்து,
அது மண்ணில் ஜனிக்கையிலே பொன் இதுவோ என பெருமையில் பூத்து ,
பசியால் அழும் போது ருசியாய் பாலை வார்த்து ,
அகமும் முகமும் மலர அன்று சுகமாய் எனை வளர்த்த தாயே !
இன்று அந்த சுகம் இன்றி தவிக்குது உன் சேயே!
வேண்டாம் இந்த பூமி திரும்பவும்
என்னை கருவாய் ஏற்றுக்
கொள்வாய் நீயே."

எழுதியவர் : (19-Sep-21, 7:55 am)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : yetruk kol
பார்வை : 822

மேலே