அதிர்ஷ்டசாலி

ஒரு வெற்றி
என்பது,
மறைக்கப்பட்ட
பல தோல்விகள்...

தோல்வி என்பது
என்னவாக வேண்டுமானாலும்
இருந்து விட்டுப் போகட்டும்.
ஏனெனில்

வெற்றியை விட,
தோல்வியை தான்
பலருக்குத் தெரியும்.
சந்தித்தும் இருப்பார்கள்,
நான் கூட...

ஆனாலும்
நான் மிகவும்
அதிர்ஷ்டசாலி...

காரணத்தை,
கடைசிக்கும் முந்தைய பாராவில்
சொல்கிறேன்.

தோல்வியின்
தரிசனம் தேவை
வெற்றிக்கு...
தேவியின்
கரிசனம் தேவை
வெகுளிக்கு....


உயிரென
உறவாடினோம
உற்ற துணையாக
இருவரும்.

ஒரு நாள்...

கடவுள்...
(அப்படி ஒருவன் இருந்தால்..)
கடவுள்கிட்ட
வேண்டிக்குறேன்,
இனி
தற்செயலாக கூட
உன்னை
சந்திக்கவே கூடாதென...
என்று விட்டு
பிரிந்தாள்
என்னை...

அந்த
வார்த்தைகளை
கேட்ட. பின்பும்
என் உயிர்
என்னை விட்டு
பிரியவில்லை.‌‌..

எனவே தான்
இக்கவிதையின்
நான்காவது
பாரா.....








✍️கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (19-Sep-21, 1:23 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
Tanglish : athirstasaali
பார்வை : 98

மேலே