படர்மேக பனி தூறல் தூரிகை இன்றி கண்ணாடியில் காரிகை தீட்ட

படர்மேக...
பனி தூறல் தூரிகை யின்றி
கண்ணாடியில் காரிகை தீட்ட...
கண்களும் கண்ணாடியின் உள்புறத்தில்
ஒருமனதாய் காரிகை மீது காதல் கொள்ள...
மோகமும் ஒன்றுடன் ஒன்று கூடாமல்
மணிக்கணக்கில் சற்று தள்ளியே நிற்க... ஆதலால்
தூது ஒன்றை மென் காற்றில் அனுப்பினேன்
மென் காற்றும் அவளது மேனியில்
வருட வருட வெட்கத்தில் ஒழிந்தால்
தூதும் சொல்ல வந்ததை சொல்லாது
இப்போது தூரமாய் நின்றது...
நெடுநேரமும் நீண்டது...
பனி மேகமும் கலைந்தது...
தூறலோ சுட சுட ஓய்ந்தது...
காரிகையின் முகமும் மெல்ல மெல்ல
கண்ணாடியில் மறைந்தது கண்களின்
காதலை அறியாததாய்...

எழுதியவர் : சிவபார்வதி (19-Sep-21, 7:25 pm)
சேர்த்தது : சிவபார்வதி
பார்வை : 44

மேலே