பெண்ணே பெண்ணே பொறுத்தது போதும்

பெண்ணே பெண்ணே பொறுத்தது போதும்;
பொங்கி எழு;
பெண்ணே பெண்ணே வெறுத்தது போதும்;
வேதனையை துடைத்தெழு;
பெண்ணே பெண்ணே கதறி கண்ணீர் சிந்தியது போதும்;
கவலையை விடு;
பெண்ணே பெண்ணே வெந்தது போதும்;
வீர்கொண்டு எழு;
பெண்ணே பெண்ணே வீற்றதும் போதும்;
விடிவு வந்துவிட்டது ;
விடுதலை பெற்று விட்டோம் என்றுவிரைந்தே ஓடு;
அள்ளி முடிய இன்னொறு பாரதத்போர் ,
நடக்கப் போவது இல்லை;
ஆட்டிப்படைக்க இன்னொரு ஜான்சி ராணி பிறந்து விட்டாள் ,
என்றே இறுமாப்புடன் ஓடு;
இனியும் எதற்கு தயக்கம்,
இடம் கொடுக்க வில்லையா உன் இரக்கம்;
துவக்கத்தில் இல்லை தயக்கம்;
துருபிடிக்க வில்லை உன் இயக்கம்.

துவண்டதுபோதும்;
துடித்தது போதும்;
துடைத்துபோட்டு வா.

அக்னி சுடாமல் விடாது;
அசிங்கம் அப்பாமல் விடாது;
அன்பு படராமல் விடாது.

அடிமை யில்லை நீ;
அடுப்பங்கடை விறகு இல்லை நீ;
எரிவதற்கு;
அடுக்குப்பானை இல்லை நீ;
ஓரத்தில் ஒதுங்கிக்கிடக்க.

அழகு பெட்டகம் இல்லை நீ'
பதுக்கி வைக்க.

அறிவுப்பெட்டகம் நீ;
ஆற்றலைப் பயன்படுத்து.

ஆசையைத் தீர்க்கும் ;
இயந்திரம் இல்லை நீ;

பொங்கி எழு;
வெறுத்தது போதும்;
பொறுத்தது போதும்;
வேலைக்காரீயாய் சேவைசெய்தது போதும்;

வெகுளி இல்லை நீ;
வெடிகுண்டு என்பதை காட்டு;
ஊர் விளைவிப்பவன் எவனெனினும்;
உடை வாலை எடுத்தே குத்து;

நடை பிணமாய் கிடக்காதே ;
நடுங்கட்டும் வெறியர்கள்;
காமவெறியனை காலால் மிதித்துவிடு;

படைப்பைச் சுமந்த உனக்கு;
பழிதீர்க்கவும் தெரியும் என்பதைக்காட்டு;
பாசத்தை கொட்டும் உனக்கு;
பயமுறுத்தவும் தெரியும் என்பதைக்காட்டு;
அடக்க நினைப்பவனை;
அடக்கிக்காட்டு;
அடித்து விரட்டு;
ஆடிப்போகும் ஆண்வர்க்கம்;

அசிங்கப்படுத்த வருபவன் ;
அங்கங்களை கொய்து;
அடையாலம் இல்லாமல் ஆக்கிவிடு;
பங்கம் செய்ய நினைப்பவனை;
பலிதீத்துவிடு;
காமவெறியனை காலால் மிதித்து விடு.

தரித்திரம் போதும்;
சரித்திரம் படைக்க;
ரௌத்திரத்தையும் பழகு.

ரச்சிக்கும் நீ;'
ராச்சசியாகவும் இருந்து பழகு;
வஞ்சிக்க வருபவனை;
பஞ்சாய் விரட்டு.

சுற்றிவரும் பகையை விரட்ட;
சுழட்டும் வாலாய் இரு
அடிமை தனத்தைவிட்டு விடு;
பெண்னே காட்சிப் பொருளாய் இருக்கும் நீ;
கடைசி மூச்சி இருக்கும் வரை போராடு;

பூனையில்லை ;
குட்டி போட்டே கிடப்பதற்கு;
புலி நீ ;
பலி தீர்க்கப்புறப்படு.

வீரப்பெண்ணே;
விருந்து படைத்தது போதும்;
விழுந்தே கிடந்தது போதும்;
விருது வாங்க புறப்படு;
விடிவு முடிவில் இல்லை;
உன் முடிவில் இருக்கின்றது.

சாதம் வடிக்கமட்டும் வரவில்லை;
சாபம் பிடித்தும் வரவில்லை;
சாதிக்க வந்தவள்.

பெண்ணே பெண்ணே ;
உன்னுள் உறங்கும் ;
வீரத்தை தட்டி எழுப்பு;
பாரதி கண்ட பெண்ணாய் இரு;
பார் புகழ வாழ்ந்து காட்டு.

பெண்ணியம் அது கண்ணியம் காப்பாற்ற போராடும்;
பெண்மை நாணத்திருக்கு பேராகும்;
ஆயினும்,
போதையில் வந்து அடிப்பவனைக் கண்டு
பொறுத்து போகாதே;
வெறுத்து வாழாதே;
பிழைத்து போகட்டும் என்று விடாதே;
விரட்டி வாழு.

வெறுத்து வாழாதே;
விருப்பத்தோடு வாழ்.
பொறுத்து வாழாதே;
ரசித்து வாழ்.
துவண்டு வாழாதே;
துணிந்து வாழ்.
பயந்து வாழாதே;
பகுத்தறிவுடன் வாழ்.
பணிந்து வாழாதே;
துணிந்து வாழ்.
விழுந்து வாழாதே;
வாழ்ந்து பார்.
தற்கொலை செய்ய தைரியம் இருக்கும்போது,
தனித்து வாழ தைரியத்தை விடாதே.

பெண்ணே பெண்ணே பொறுத்தது போதும்;
பொங்கும் கடலாய் புறப்பட்டுவா;
தற்பெருமையை தள்ளிவைத்து வா;
தன் அடக்கம் இருக்கட்டும் ;
ஆணவம் வேண்டாம்.


பெண்ணே மறவாது இது கேள்;
உன் உரிமையை நிலைநாட்ட ,
பெண்ணுரிமைக்கு ஏன் போராட்டம்;
ஒன்றாய் கூடு ஒற்றுமையுடன் செயல்படு;
பெண் உரிமை உன் உரிமையாய் தானாய் தயங்காது வரும்,

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (20-Sep-21, 5:32 pm)
பார்வை : 95

மேலே