மான் இறைச்சி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

மான்கறிஉண் டார்தமக்கு மாதொந்த நோய்கபநோய்
ஊன்பகந்த ரங்கழலின் ஊதையொடு - தான்பரவு
வாதநமை யாந்தினவும் வாங்குங்கண் ணிற்புகையாம்
மோதுபித்தம் வீறும் மொழி

- பதார்த்த குண சிந்தாமணி

இவ்விறைச்சியால் தொந்த நோய், ஈளை, கபம், மாமிச பகந்தரம், கழல் வாயு, வாதப்புடை இவை போகும்; கண்புகைச்சலும் பித்தமும் உண்டாகும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Sep-21, 7:53 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

மேலே