மதிமயங்கியே

மதிமயங்கியே !

மது அருந்தும் வழக்கம்
உண்டோ?
மதி மயங்கி பழக்கம்
இல்லை என்பேன்!
மறுப்பவர் ஒருவர்
உண்டு,
மனைவியன்றோ அது.

மதி மயக்கும்
மாலையில்,
மது அருந்தும் வழக்கம்
உண்டு,
மதிமயங்கியே
ஆடுவேன் பாடுவேன்,
மனைவியிடம் பேசிடுவேன்
தமிழன் புகழ்,
கேட்டிடுவாள் சலிக்காமல்.

ராமானுஜம் புகழ்,
C.V.Raman புகழ்,
சந்திர சேகர் புகழ்,
வெங்கட்ராமன்,..
.................
இவர்களெல்லாம்
இன்றையவரன்றோ!

இந்தியாவின் புகழ்
பாடி முடிக்க,
மதுப் போத்தல்கள்
பல வேண்டும்,
போய்விடுகிறேன்!
ஒன்று மட்டும்
சொல்லி விட்டு.

புச்சியத்தை (0)
படைத்து,
புதியதோர் உலகம்
படைத்தானே,
அவன் பெயரை
மறைத்து,
பல கதைகள் கட்டி,
ஆங்கிலேயன் அவன்
தனக்கு எல்லோ புகழ்
சூடப் பார்த்தான்.

முழுப் பூசனிக்காயை
சோற்றுக்குள்.........?
ஆகிவிட்டது அவன்
கதை,
தொடரட்டுமா இல்லை
முடிக்கட்டுமா?

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (21-Sep-21, 8:07 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 130

மேலே