ஊர் திரும்பிய கடவுள்

ஊர் திரும்பிய கடவுள்.

கடவுள் மனிதனாகப்
பிறக்க வேண்டும்!
அவன்,
ஊர் ஊராகச் சென்று,
ஜாதிகள் இல்லையடி
எனப் பாடி,,
தர்மம் தலை காக்கும்
எனவும் பாடி,
அடியும் உதையும்
வாங்கியே,
அரச மரத்தடி நிழலில்,
உறங்கிட வேண்டும்.

ஊருக்கு புதிய
மனிதனை,
வேடிக்கை பார்க்க
வந்த சிலர்,
தொட்டுப் பார்க்க!

பார்வை அற்றவன்
பார்வை பெறவும்!
முடவன் எழுந்து
நடக்கவும்! ......
கண்ட காட்சி
காட்டுத் 🔥 யாக
பரவிடவே !

முதல் வந்தார்!
அரசியல் வாதிகள்,
ஆசி பெற்றுச் செல்ல,
அடுத்தே வந்தார்!
பணம் படைத்தவர்.

இப்படி சில காலம்,
இருந்த அந்த
இறை மனிதன்,
இரவோடு இரவாக,
மறைந்திட்டான்,
உலகம் சமநிலை
அடையட்டும் என்றே.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (21-Sep-21, 11:03 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 56

மேலே