அழகான ஊர்
எனக்கு
விலைமதிப்பற்ற நீ
கிடைத்திருக்கிறாய்...
உனக்கு
'வெறும்' நான்
கிடைத்திருக்கிறேன்.
நான்
காலை வணக்கம்
சொல்கிறேன்
நீ
காதல் வணக்கம்
சொல்வது போல்,
அழகு வணக்கம்
சொல்கிறாய்...
நீ
எனக்கு
அழகாய் தெரிகிறாய்...
உண்மையில் நீ
அசத்தலாக இருக்கிறாய்...
எப்படி
உனக்கு மட்டும்
நான்
அழகாகத் தெரிகிறேன்
என்கிறாய்....
ஏனென்றால்
நீ
அழகு ஊரிலிருந்து
வருகிறாய்....
என்கிறேன்.
அது எப்படி,
நீ
என் ஊரை
பார்த்தது கூட
கிடையாது...
என்கிறாய்...
ஆனால்...
உனக்குத் தெரியாது
எனக்குத் தெரியும்,
அழகானவர்கள்
அழகான ஊரிலிருந்துதான்
வருவார்கள்....
✍️கவிதைக்காரன்