கரிசக்காடு பரிசம் போடத் தவிக்குது

கரிசக்காடு பரிசம் போடத் தவிக்குது

செவந்தி வானம்
செந்தூரத்தைத் தூவுது
இது செதுக்குது விண்ணில்அழகை
பக்கத்தில் வந்த மேகம்
சொர்க்கத்தைத் தேடி
விண்ணிலிருந்து மண்ணுக்கு வர தவிக்குது

வெட்கத்தில் நனைந்த பூமி
வேடிக்கை பார்க்குது
நிஜம் இல்லா பிம்பங்களை நினைவுகளாக
மழை நீர் சுமக்குது
மாலை கூ( சூ)டிய பொழுது
மழைநீர் நேங்கிய மாலைப்பொழுது

மண்ணில் விழுந்த மழைநீர்
மனதைப் பரிக்குது
வான்தான் மண்ணில் விழுந்ததோ
வளர்ந்த பனைதான் நீரைத்தேடி வந்ததோ
மாயைதான் மாயைதான்
மாலைப்பொழுது தூவிய அழகுதான்

உயர்ந்து நின்ற பனையும்
உயரேச் சென்னு விண்ணைத்தொட்டு
விளையாடத்துடிக்குது

கற்குவியல்கள் கட கடவென்றே சரிய
முற்புதற்கள் முகம் எட்டி பார்க்குது

காற்றும் ஊற்றாய் வந்து
பொழுதை நனைக்குது
போகத்துடித்தது மாலைப்பொழுது

குவிந்த மணலும் குழைந்து
பூசுது பொழுதை

நனைந்த பூமியும்
நினைவுகளை நனைத்து
புதிய ஓவியம் தீட்டுது

கழனி சுமந்த காதலிது
கா(சா)ட்சியாய் நீரில் மிதக்குது
ஆனந்தத் தென்றல் வீசுது
அள்ளிப்பருக கண்கள் துடிக்குது

கரிசக்காடு பரிசம் போடத் தவிக்குது
நித்தம் நினத்தம் நடக்கும்
நாடகம் தான்
நீல் வானம் நடத்தும் ஜாலங்கள்தான்

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (25-Sep-21, 2:08 pm)
பார்வை : 47

மேலே