புரியவில்லை

" அன்பே' என்றான் அவன்,
'வந்துவிட்டேன் முன்பே' என
முறைத்தாள் அவள்!.

'கோபிக்காதே கரும்பே'
என்றான் அவன்,
'இப்படியே செய்தால் இனி
உனை விரும்பேன்'
என்றாள் அவள்!.

'உனக்காகவே ஓடோடி வந்தேன்@
என்றான் அவன்,
'காத்திருந்து, காத்திருந்து
நொந்தேன்' என்றாள் அவள்.

'இனி இவ்வாறு நேராது'
என்றான் அவன்,
'அப்படி நேர்ந்தால் நம் காதல்
தேறாது' என்றாள் அவள்.

'கண்ணே நாளை பூங்காவில்
சந்திக்கலாம் வா' என்றான் அவன்,
'அன்பே வா! நாளையாவது முன்பே வா' என்றாள் அவள்.

'ஆகாது இனி லேட்டு' என்றான் அவன்,
'ஆனால் உன் காதலுக்குத்தான்
வேட்டு' என்றாள் அவள்!.

'இன்று போய் நாளை
வரட்டுமா' என்றான் அவன்,
'அதுவரை ஏக்கம் என்னை
விரட்டுமா' என கலங்கினாள்
அவள்.

கோபமா? தாபமா? தெரியவில்லை!

காதல்! அது செய்யும் மாயம்தான் என்ன? புரியவில்லை!."

எழுதியவர் : (25-Sep-21, 12:27 pm)
சேர்த்தது : Lakshya
பார்வை : 115

மேலே