யார்
"உன் விழிகளில்
என் மயக்கத்தையும்,
உன் சிரிப்பில்
என் இன்பத்தையும்,
உன் ஸ்பரிசத்தில்
என் சொர்க்கத்தையும்,
உன் அன்பிலே
என் வாழ்வையும்,
உன் வியர்வையில்
என் கவலையையும்,
உன் கண்ணீரில்
என் துன்பத்தையும்,
உன் வலியில் எனக்கு
ஆறாத ரணத்தையும்,
உன் உயிரில் என்
இதய துடிப்பையும்,
உன் வேதனையில்
என் மரணத்தையும்,
கலந்தது யார் ?
அந்தப் பொல்லாத
காதலா?".