நேற்றே
என் குரலே
அப்படிதான்...
நான்
கொஞ்சி கொஞ்சி
பேசுறேன்
அப்படினு
நினைச்சுக்கிட்டு
காதல்ல விழுந்துராதே
என்றாள்...
அப்படியா...
சரி..
ஒரு நாள் டைம் குடு,
யோசிக்கிறேன்....
என்றேன்.
அடுத்த நாள்...
ஹப்பாடி...
இனிமேல்
காதலில் விழ மாட்டேன்...
என்றேன்.
ஏன்...?.
ஒரு நாளில்
எப்படி வந்தது
இந்த தெளிவு...?
என்றாள்
கேலியாக...
ஏன்னா,
நான் நேற்றே
உன்மேல் காதலில்
விழுந்து விட்டேன்..
ஏற்கனவே
காதலில் இருப்பவன்
திரும்ப எப்படி
காதலில் விழ முடியும்...?
"டேய்..
நல்லா யோசிச்சுக்கோ...
நான்
ஒரு பிசாசு....".
என்றாள்
சந்தோஷமாக..
"நீ
கொள்ளிவாய்
பிசாசாக இருந்தாலும்
பரவாயில்லை..."
✍️கவிதைக்காரன்.