நிசப்தத்தின் சப்தம்
வெண்மதியே என் விழியில் நல்லதோர் வீணை செய்பவளே
கார்முகிலே என் காதல் கண்மணியே
தென்றலே என்னை தீண்டி போகும் தெள்ளமுதே
தனிமையில் அமைதியின் நிசப்தத்தில் தேடுகிறேன்
மௌனம் என்னிடம் கதைகள் பேச
இருளில் என் அருகே நீயும் இருந்திட
கதைகள் பல பேசுகிறேன், ஒலியில்லா என் வார்த்தைகள்
உன்னில் காதல் மொழிந்திடுமா
கனவுகளில் கரைகிறாய், கண் இமையாமல் என்னில் உறைகிறாள்
என் சோகத்தில் சுகமாகிறாய், என் தனிமையில் துணை ஆகிறாய்
என் தோல்விகளில் துணை ஆகிறாய், என் கண்ணீரில் கரம் ஆகிறாய்
என் நிசப்தத்தின் சப்தம் நீ, என் இதயத்தின் மெல்லிய ஓசை நீ
கனவுகளில் மட்டும் களவாடிய என் அழகிய பேதையே
என் நிசப்தத்தின் சுகமாவாய், எங்கே நீ என் தூரிகையை.