கண்ணா போய்விடு

கண்ணா போய்விடு.

கண்ணா நீ,
களவாடியது என் மனம்,
கோபியர் மனம் அல்ல.

காதலன் எனக்கு இருக்க,
கண்ணா! உனக்கு
இங்கு என்ன வேலை?
காதலன் அறிந்தால், என்
காதினை திருகிடுவான்.

கண்ணா போய்விடு
இங்கிருந்து,
இல்லையேல்! உன்
ராதையை கூப்பிடுவேன்,
அப்புறம் தெரியும்
உன் பாடு!.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (30-Sep-21, 8:53 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : kannaa poyvidu
பார்வை : 97

மேலே