புன்னகைப் பூவிதழில் புதுக்கவிதை அன்பில் உரையாட

விழிதன்னில் கயல்கள் இரண்டு காதல் கதைபேசித் துள்ள
மொழியேந்தும் புன்னகைப் பூவிதழில் புதுக்கவிதை அன்பில் உரையாட
கழிநெடி லடிஆசி ரியவிருத்தம் கரைபுரண்டு நெஞ்சில் பெருகிட
பழுதிலா பேரெழிலே புகல்வாய் ஒருவார்த்தை எழுத்தில்நான் பதிவிட !

எழுதியவர் : கவின் சாரலன் (30-Sep-21, 10:05 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 114

மேலே