பருப்புப் பொங்கல் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

போகமிக உண்டாகும் பொங்கியபித் தந்தணியுந்
தேகமதில் வாதமிகச் சேருங்காண் - வாகார்
பொருப்புப்போல் விம்முமுலைப் பூங்கொடியே பச்சைப்
பருப்புப்பொங் கற்சோற்றைப் பார்

- பதார்த்த குண சிந்தாமணி

பச்சைப் பருப்புப் பொங்கல் சாதம் வீரிய விருத்தி, வாதப்பெருக்கம் இவற்றை யுண்டாக்கும்; பித்தத்தைத் தணிக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Oct-21, 9:09 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

மேலே