காந்தி ஜெயந்தி

காந்தி ஜெயந்தி

வட்ட க் கண்ணாடிக்கு சொந்தக்காரர் ஐயா
வலிமை மிக்க கண்கள் கொண்டவர் ஐயா
அரை உடம்பு மூடியவர் என்றாலும் ஐயா
அகிலத்தையும் திரும்பச் செய்தவர் ஐயா
உப்பு சத்தியாகிரகம் நடத்தியவர் ஐயா
ராட்டினத்தில் பஞ்சு நூல் நூற்றவர் ஐயா
கதர் ஆடையை அணிந்தவர் ஐயா
அந்நிய துணிகளை எரித்தவர் ஐயா
அன்பில் நாட்டை இணைந்தவர் ஐயா
அகிம்சையை போற்றி போதித்தவர் ஐயா
ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்தவர் ஐயா
ரத்தமின்றி போரின்றி சுதந்திரம் அடைய
ஆங்கிலேயரை வெளி அனுப்பியவர் ஐயா
தன்னையே அர்ப்பணித்த அந்த மகாத்மாவை
இந்நாளில் நாம் போற்றி வணங்குவோம்

எழுதியவர் : கே என் ராம் (1-Oct-21, 3:09 am)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 33

மேலே