தென்றலுடன் தேநீர் மாலையில்
சொல் அழகும்
கருத்தழகும்
கவிதைக்கு அழகு
மௌனமும்
உணர்வும்
மனதிற்கு அழகு
மௌனத்தில்
விழி அசைவும்
இதழ் அசைவும்
காதலுக்கு அழகு
தென்றலுடன்
தேநீர் மாலையில்
அவளுடன் அமர்ந்து விட்டால்
மாலையினும்
வேறு ஏது அழகு
----கவின் சாரலன்