ஆசிரியர்

ஆசிரியர்
=========
ஏற்றிவிட்டுப் பார்த்துநிற்கும் ஏணி
இவரெம்மைக் கரைசேர்க்கும் தோணி
ஆற்றுகின்ற சேவையிலே
ஆசிரியர் நெஞ்சினுள்ளே
ஊற்றெடுக்கும் பேரறிவுக் கேணி
**
கற்பிக்கும் ஆசிரியர் ஆவி
காற்றிலெமக் கறிவுமலர்த் தூவி
வெற்றியெனும் பாதையிலே
வீறுநடை போடுதற்காய்
நற்பண்பின் கண்திறக்கும் சாவி
**
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : ஐயன் நடராஜ் (6-Oct-21, 1:36 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 91

மேலே