உன் இனமே உன்னால் அழியலாம்

தொடுவானம் அருகில் இல்லை;
தொல்லை இன்னும் விடவில்லை;
நெடுவானம் விழுவதில்லை;
நீல் வெளிப்பயணத்திற்கு முடிவில்லை;
தினம் தினம் உதிக்கும் சூரியன் ஓய்வு எடுப்பதில்லை;
நிலவும் தன் உருவத்தை மாற்றுவதை நிறுத்துவதில்லை;
அண்டங்களின் துவக்கம் தெரியவில்லை ;
ஆண்டவனும் கண்ணுக்கு புலப்படுவதில்லை ;
அருவியின் துவக்கம் அறியமுடிவதில்லை;
குருவியின் சப்தம் தொடரப்போவதில்லை;
குறைகூறத் தெரிந்த மனிதனுக்கு;
குற்றத்தை குறைக்க நேரமில்லை;
கூக்குரல் ஓய்வதில்லை;
சுற்றிவரும் கோள்களின் பிறப்பு தெரியவில்லை;
அதன் சுழட்சி புரியவில்லை;
சூயனுக்கு யார் நெருப்பு மூட்டினார்கள் தெரியவில்லை;
சூழ்சிமம் நிறைந்த உலகில் சூது வாதுவின் துவக்கம் தெரியவில்லை;
சுழலும் பூமி எப்போது நிற்கும் யாருக்கும் தெரியாது ;

எரிந்தே ஓடிவரும் வெளிச்சத்தின் ரகசியம் தெரியவில்லை;
எரிந்து வந்த கிரகணங்களின் முடிவும் தெரியவில்லை;
சுடுகாட்டில் சாம்பலிலிருந்து உடல் திரும்ப வருவதில்லை;

ஏழு வண்ணங்களின் ரகசியம் தெரியவில்லை;
ஏழ்மையின் நிலை மாறப்போவதில்லை;
எழுத்தானியின் முனையில் பெற்ற ஞானம் இன்று ஏன் பிறக்கவில்லை;
ஏழ்மையின் முடிவும் அறிய முடியவில்லை;

புதையுண்டு போகப்போகும் கலாச்சாரத்தின் போக்கிடம் புரியவில்லை
புரியாத புதிரில்;
அறிவியலின் ஓட்டம் அடங்கப்போவதில்லை;
அறிவியல் யுகத்தில் அறிவியல் சார் யுத்தம் நிற்கப்போவதில்லை;
விஞ்ஞான விபரீத விளையாட்டின் விளைவு விட்டுப்போவதில்லை ;
விளையாட்டுப் பிள்ளைகளின் சுட்டித்தனம் மறைந்து ;
முகம் பார்த்து சிரிக்கக் கூட ஆட்கள் இல்லாது ;
விளையாடாது இயந்திர செவிலியர்களின் வளர்ப்ப்புக்கு ஆளாகாமல் இருக்கப்போவதில்லை ;
இருக்கமான வாழ்க்கையில் ;
இளம் சிறார்கள் சிதையுண்டு போகாமல் இருக்கப்போதில்லை ;
ஆதாயம் தேடும் மனிதனின் ஆசைக்கு எல்லை இல்லை ;
ஆயுதத்தை தூக்கிய கைகள் அழிக்காமல் விடப்போவதில்லை ;
வேற்று உலக மனிதனின் படை எடுப்பு நடக்காமல் இருக்கப்போவதில்லை;
வியர்வை இன்றி மனிதன் உழைக்கலாம் :
விடுதலை இன்றி மனிதன் தவிக்கலாம் ;

நீல் கடல் கொந்தலிக்க மறப்பது இல்லை;
நெருக்கடியில் நித்திறையின் நேரம் குறையாமல் இருக்கப்போவதில்லை;
நித்திறைக்கு மருந்தை தேடாமல் மனிதன் இருக்கப்போவதில்லை
வேறருக்கத்துவங்கிய மனிதனுக்கு;
வேர்வைக்குப்பதில் விஷக் கிருமிகள் வெளிவராது இருக்கப்போவது இல்லை;
வேரோடு மனித வர்கமே அழியும் காலமும் வரலாம்;
மரபுமாற்று நிகழ்வுகள் நிற்கப்போவதில்லை;
இன்னுமோர் அடிமை யுத்தம் பிறக்காமல் இருக்கப்போவதில்லை;

சிறகுக்குள் வானம் அடைபடுவதில்லை;
சிற்றின்பத்தேடல் நிற்காமல் இருக்கப்போவதில்லை;
நிலவு தேய்வதையும் வளர்வதையும் நிறுத்தவில்லை;
சிந்தனை சிறகடித்து பறக்காமல் விடுவதில்லை;
உணவின் தேடலும் நிறுத்தவில்லை;

உல்லாசத்தின் தேடலும் ;
நிறுத்தப்போவதில்லை ;
உள்மனதின் சந்தேகம் தீரப்போவதில்லை ;

விளகிச் சென்றாலும் உறவு விடுவதில்லை :
விழுந்த வலி தீரவில்லை :
காற்றின் நிறம் தெரியவில்லை :
காதல் போதை தீரவில்லை :

புவியின் இதயமாம் காற்றின் பிறப்பும் அறியமுடிவதில்லை :
காட்டை அழித்தால் உனக்கு உணவு கிடைக்கப்போவதில்லை :
கூட்டுக் குடும்ப வாழ்க்கை போய்,
தனித்து வாழும் வாழ்கை துவங்கி,
துண்டித்த வாழ்கையில்,
தொடர்புகளைத்தேடி ஓடும் காலம் எப்பொழுது வரும் தெரியவில்லை:
மக்கள் தொகை நெரிசலில் நெருக்கமாய் கூட்டாக வாழும் காலம் வெகு தொலைவில் இல்லை:
குழந்தை பெருவதைவிடுத்து:
ரோபோக்களுடன் வாழப்போகும் காலம் வராமல் இருக்கப்போவதில்லை:

புவியின் தாகம் தீரப்போவதில்லை:
கட்டுப்படுத்த முடியாத மக்கள் தொகை நெருக்கத்தால்:
புவிதினரத்தான் போகிறது என்பது ஏன் மனிதகுக்குத் புரியவில்லை:
காற்றை சோற்றை நீரைத்தேடி மனிதன் போராடாமல், இருக்கப்போவதில்லை:
கட்டுப்பாடும் தட்டுப்பாடும் ஏற்படாமல் இருக்கப்போவதில்லை:
காசு பணத்தைத்தேடி ஓடும் மனிதனின் ஓட்டம்,
திண்டாட்டம் நிற்கப்போவதில்லை;
சிறைச்சாலையில் இடம் இல்லது அவ்வப்போது தீர்வு எடுக்கப்படலாம் ;

வாழ்க்கை சொகுசைத்தேடுபவன்;
வயோதிகத்தை விரைவில் அடையாமல் இருக்கப்போவதில்லை;
மனித செயற்கைப்பாகங்களைச் செய்யும் தொழிலும்,
தெருவுக்குத் தெரு மருத்துவமனை பிறக்காமல் இருக்கப்போவதில்லை;
மருத்துவனைக்கு நோயாளி வருவதுபோக நடமாடும் மருத்துவமனையே;
மனிதனைத்தேடி வரப்போகும் காலம் தூரத்தில் இல்லை,
மண்ணைத்தேடி மனிதன் போராடாமல் இருக்கப்போவதில்லை;

வாழ்க்கைப் பயணத்தில் பெரிய மாற்றம் ஏற்படாமல் இருக்கப்போவதில்லை;
வாய்விட்டு கதறும் போது உறவு உடன் இருக்கப்போவதில்லை;
வாகங்ககள் சாலைகளில் செல்லாது,
பூமிக்கு அடியிலும் ஆகாயத்திலும் சாலைகளையும் குடிலையும் அமைக்க போகாமல் இருக்கப்போவதில்லை.
சாதி மதங்கள் இன்றி கலப்பட வாழ்க்கை நிகலாமல் இருக்கப்போவதில்லை.
மனிதன் வாகனமாய் மாறி ஒரு இடத்திலிருந்து மற்றொறு இடத்திற்கு
பறக்காமல் இருக்கப்போவதில்லை;

அண்ணன் தம்பி அக்கா தங்கை உறவுகள் அர்த்தமற்று போகாமல் இருக்கப்போவதில்லை
புல்; பூண்டுகள் முளைக்கக் கூட பூமியில் இடம் இருக்காது.
புதிய உலகில் பறவையாய் மனிதன் பறக்காமல் இருக்கப்போவதில்லை ;
விவசாயம் விழுந்தபின் வேறு உணவுப் பொருட்கள் கிடைக்காத வேலையில்,
உணவுக்கா மாமிச வேட்டை துவங்காமல் இருக்கப்போவதில்லை:
இயற்க்கை சுவாசம் பொருத்தி வலம் வரப்போகும் காலம் தூரத்தில் இல்லை ;
செயற்கை இறைப்பையை மனிதன் சுமக்கும் காலம் வரலாம் ;
கனரக வாகனங்களுக்குள் இராக்கட் போன்ற நவின ஊர்திகளில் கூட்டாய் வாழும் காலம் வரப்போகின்றது ;
சிவப்பனுக்களின் நிறமாற்றம் ,
மனித உருவத்தில் மாற்றம் ,
என்று மாற்றங்கள் நிகழப்போகின்றதோ ,
பனிப்போர்கள் நடக்கலாம் ,
பனிக்கட்டியாக புவி மீண்டும் உருவாகலாம் :

கடலில் வாழும் விலங்கினங்கள் தரையைத்தேடி வரலாம் ;
செயற்கை அழிவு வேற்று உலகின்தாக்குதல் என்று
புவியே போர்க்கூடமாக மாறப்போது நடக்காமல் இருக்கப்போவதில்லை ,
புவியைத்தாண்டி புது மனித இனம் பிறக்காமல் இருக்கப்போவதில்லை ;

வேற்றுலக வேட்டை வெறியாக மாறாமல் இருக்கப்போவதில்லை;
அண்டைக்கண்டத்தின் அதிசயப்பிறவிகள் அடைக்கலம் தேடி வராமல் இருக்கப்போவதில்லை ;
புதிய தேசங்கள் பிறக்காமல் இருக்கப்போவதில்லை;
புரட்சி வெடிக்காமல் இருக்கப்போவதில்லை ;
புதுமை புதுமை என்று
முதுமை தொடாமல் இருக்கப்போவதில்லை ;
பாசையின் கலப்பில் ;
பாசங்கள் மாறாமல் இருக்கப்போவதில்லை ;
மரபு மாற்றம் மரபுச் சிதைவு ;
நடக்காமல் இருக்கப்போவதில்லை;

கருகிடும் பூமியில் காடுகள் மறையாமல் இருக்கப்போவதில்லை ;
காணாத அதிசயங்கள் பிறக்கப்போகாமல் ,ருக்கப்போவதில்லை ;
கட்டிடங்கள் இடிபடாமல் இருக்கப்போவதில்லை;
கட்டிய மனைவி யார் யார் என்று தேடாமல் இருக்கப்போவதில்லை ;
கூண்டுப்பறவைபோன்று குடில்களை அமைக்காமல் டென்டு வாழ்க்கையும் தொடரும் நாள் தொலைவில் இல்லை;

விஞ்ஞான மனிதனின் தேடல் நிற்கப்போவதில்லை ;
விஞ்ஞான விவரீதங்கள் பல பல நிகழாமல் இருக்கப்போவதில்லை ;

வித விதமான புதுமைகள் நடக்காமல் இருக்கப்போவதில்லை ;
பேசாத ஊமையாகலாம் ;
பேசிட நேரம் இல்லாமல் போகலாம்; ;
மூளைக்கு வேலை துவங்குவதால் ,
முழுவளர்ச்சி இல்லாத மனிதனாகலாம்;
கோவில்கள் கோபுரங்கள் அதிசயமாகலாம்;
உச்சகட்ட போராட்டத்தில்,
மனித இனமே விழாமல் இருக்கப்போவதில்லை :

கடல் நீர் மண்ணை விழுங்கலாம்:
கடல்நீருக்கு அடியுலும் கலன்கள் அமைத்து:
மனிதன் வாழலாம்;
கடல் நீரும் வற்றலாம்;

நெட்டைமனிதன்;
குட்டை மனிதனாகலாம்;
குட்டை மனிதன் நெட்டையாகலாம்;
மெய்ஞானத்தேடல் நிற்கப்போவதில்லை;
அ ழிவின் துகவக்கமும் நிற்கப்போவதில்லை;
அடையாலம் தேடி மனித இனம் ஓடலாம்;
ஆறுகள் மறைந்து போகலாம்;
உனது கழிவே,
மறு சுழட்சியால் மீண்டும் உணவாகலாம்;
உனக்கு வயிற்று பசியே எடுக்காமல் இருக்கலாம்;
அலை அலையாய் புதிய நோய்கள் பிறக்கலாம்;
கனிமவளங்கள் காணாமல் போகலாம்;
கண்ணிருந்தும் குருடனாகலாம்;
தேடல் தேடல் தேடலில்;
மனிதன் தினராது இருக்கப்போவதில்லை ;
கூண்டோடு கூண்டாக மனிதன் மறையலாம்;
இனப்பெருக்கத்தையே சிறுது காலம் நிறுத்த சதிகளும் நடக்கலாம்;

எரிந்துவந்த பூமி மீண்டும் எரியத்துவங்கலாம் ;
புவியின் கால பருவமாற்றம் ;
மீண்டும் ஓரு பிரளய வெடிப்பு நிகழலாம் ;
புவியே சிறு சூரியனாகலாம் ;
புவியும் உடைந்து புது புது கோல்கள் உருவாகலாம் ;
அல்லது
எரிந்து எரிந்து மீண்டும் ஒரு ;
புதிய வாழும் பூமி உருவாகலாம்.
வேற்று கிரக மனிதனின் தாக்குதல்,
புவி தூல் தூலாய் சிதறலாம்,
உன் வெறித்தனமான ஆட்டத்தாலும்,
விளையாட்டாலும்,
உன் இனமே உன்னால் அழியலாம்;

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (6-Oct-21, 1:46 am)
பார்வை : 296

மேலே