என்கவிதை நெஞ்சில் நீவரைவது காதலோவியம்

குவிந்த இதழ்கள் மலராத மொட்டோவியம்
புரியும் புன்னகையில் நீஎழுதுவது முத்தோவியம்
பொழில் தாமரை நிகர்விழிகள் எழிலோவியம்
என்கவிதை நெஞ்சில் நீவரைவது காதலோவியம்
-----இயல்பு வரிகளில்


பெண்னுன் குவிந்த இதழ்கள் மலராத மொட்டோவியம்
விண்ணிலா நீபுரியும் புன்னகையில் எழுதுவது முத்தோவியம்
தண்பொழில் தாமரை நிகர்த்த உன்விழிகள் எழிலோவியம்
கண்ணே என்கவிதை நெஞ்சில் நீவரைவது காதலோவியம்

---அதே வரிகள் பெண் விண் தண் கண் எனும் ஒரே அடி எதுகையால்
ஐஞ்சீர் பெற்று பொலியும் கலித்துறையாக
ஈற்றுச்சீர் கனிச்சீராய் அமைந்து பாவிற்கு சுவை தருகிறது
என்பதை யாப்பறிந்தவர் ரசித்துப் போற்றக்கூடும்

குவிந்த இதழ்கள் மலராமொட் டோவியம்
நீபுரியும் புன்னகை தன்னில்முத் தோவியம்
தண்பொழில் தாமரைக் கண்களெழி லோவியம்
உன்காத லோவியம்நெஞ் சில்

----கனிச்சீரை வெண்பா ஏற்காது கனியை மாற்றிக் காயாக்கி விளமாக்கி
வெண்பா வடிவாக்கியிருக்கிறேன் அதே வரிகளை

எழுதியவர் : கவின் சாரலன் (6-Oct-21, 10:00 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 57

மேலே