தூங்கும் போது நுழைந்தார்
நேரிசை வெண்பா
காட்டுமிராண் டிக்குக் கடவுளும் சொந்தமா
காட்டினா னாக்கடவுள் கண்டனையோ --- காட்டு
மிராண்டி யிதில்யார்சொல் நீயா அவனா
தராத றமறிந்தார் யார்
தேச விடுதலைக்கு நேசமாய் போராடி
தேச விடுதலைப் பெற்றார்பின் --- கீசகர்
இந்துக்கள் ஓய்ந்து இழந்தனர் போர்குணம்
சந்தில் நுழைந்தார் சதி

