காட்டிலந்தை சமூலம் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
விறகுணுமெண் ணெய்க்கனலாம் மெய்யெரிவு நீக்குஞ்
சிறியவிலைக் குக்கடுப்புத் தீரும் - முறிக்கு
அழைத்திடுபித் தும்போம் அதன்கனிய டைக்குத்
தழைத்திடுமிக் காட்டினிலந் தை
- பதார்த்த குண சிந்தாமணி
இதன் விறகு உடல் வெப்பத்தைக் குறைக்க தைலம் காய்ச்சுவதற்குச் சிறந்த விறகாகும்; இதனிலை தேக எரிவையும், கொழுந்து வயிற்றுக் கடுப்பையும் பழம் பித்தத்தையும் நீக்கும்