நறுவலி சமூலம் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
நறுவலியி லைக்கிரைப்பு நாசமவ் வேர்க்கு
மறுவில் எலும்புருக்கி மாறும் - நறுவலியின்
தன்பழமி ரத்தபித்தஞ் சார்மேக முந்தீர்க்கும்
இன்புறயா வர்க்கும் இசை
- பதார்த்த குண சிந்தாமணி
இதன் இலை இரைப்பையும் வேர் எலும்புருக்கியையும் பழம் இரத்த பித்தத்தையும், பிரமேகத்தையும் நீக்கும்.