காதல் பித்தம்
கலித்துறை
வெறியில் அலைவ ரித்தளத்தில் காதல பித்தமேறி
தறிகெட் டவரும். நாடுபற்றி. கொண்டா ரிலைகவலை
குறிவைத் திடுமக் கும்பலடை யாளம். கொண்டவரும்
பறிக்குங் குழியில் தவறிவிழா திருபாய் கண்திறந்தே
கவிழ்க்க இரகசியம் காக்கநீயோ காதல்
தமுக்கடித்து காலமோட்டு வை
தமிழையும் தமிழினத்தையும் தமிழ் மரபு கலாச்சாரத்தையும் குழிதோண்டிப் புதைக்க
பலரும் பலவகையில் முயன்று வருகிறார்கள் ஆனால் நீயோ நாடு மொழி இனம்
என்று எதைப்பற்றியும் கவலை படாதது காதல் காதல் என்று தினமும் ஐந்து பாட்டு
கிறுக்குவதை வேலயாகக் கொண்டு அலைவதேன்.? கவிதைக்கு ஆயிரம் கருத்திருக்க
அதை எழுத நாட்டுப் பற்று மொழிப்பற்று எல்லாமும் மீண்டும் வளரும்.