அநுபவமும் சிந்தனையும்

அநுபவமும் சிந்தனையும்

சிந்திக்கும்
வேளையெல்லாம் - என்
சிந்தனையில்
வருவதெல்லாம்,
"அவள் "

பயமறியா வயதினிலே,
பரிட்சை மண்டபங்கள்
பல புகுந்து,
பல பேருக்கு,
பரிட்சை எழுதிய
பயித்தியக்காரன்.

அகப்பட்டிருந்தால்?
அதோ கதி
ஆகி இருக்கும்,
என் வாழ்வு,
அகப்படாமல் பார்த்துக்
கொண்டாள்.
" அவள் "

காளையான வயதிலே,
காதல் அல்ல காமம்,
என் கண்களை
மறைத்திருக்க,
படு குழியில்
வீழ்ந்திடாமல், கரம்
கொடுத்தாள்
" அவள் "

படிப்பே வேண்டாம்,
என்று இருந்த
மடைப்பயல் என்னை,
படியடா என்று
சொல்லி,
பட்டங்கள் பல தந்து,
பார்த்து மகிழ்ந்தாள்
" அவள் "

இன்றும் என்னுடன்
இருக்கிறாள்,
இல்லை எனில்!
இன்னும் பல
இன்னல்களில்,
இடறுப்பட்டல்லோ
இருந்திருப்பேன்.

அவள் யார்?
எவருமில்லை.
என் அன்னை
உங்கள் அன்னை
பராசக்தியே.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (12-Oct-21, 7:00 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 92

மேலே