வாழ்க்கை பூஞ்சோலைதான்

குடிசையில் வாழும் மனிதன்
மாளிகையில் வாழும்
மனிதனை பார்த்து
ஏங்குகிறான்...!!

மாளிகையில் வாழும் மனிதன்
குடிசையில் வாழும்
மனிதனை பார்த்து
ஏங்குகிறான்...!!

மனிதனின்
சந்தோஷமும் நிம்மதியும்
வாழும் இடத்தில் இல்லை
வாழும் முறையில்தான் இருக்கு...!!

இருப்பதை விட்டு விட்டு
பறப்பதை பிடிக்க நினைத்தால்
மனிதனின் வாழ்க்கை
துன்பத்தில் தான் முடியும்...!!

வாழ்க்கையில் சந்தோஷம்
எல்லோருக்கும் அமைவதில்லை
நாம்தான் அதனை அமைத்துக்
கொள்ள வேண்டும் ..!!

சூழ்நிலைகளை அனுசரித்து
வாழ்வதற்கு மனிதன்
பழகிக் கொண்டால்
ஒவ்வொரு மனிதனின்
வாழ்க்கையும்
பூஞ்சோலைதான் ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (18-Oct-21, 9:15 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 121

மேலே