தனிமை
நான் பிடித்து ஏற்றது அல்ல
எனக்கு பிடித்தவர்கள் தந்து போனது
கை நீட்டி காத்துக்கிடக்க
தாயாய் என்னை அரவணைத்தாய்
என் தாயோ என்னை தூக்கி எறிந்தாள்
வேதனைகள் என்னை வசைபாட
தகப்பனாய் எனக்கு தோள் கொடுத்தாய்
என் தகப்பன் என்னை மறந்து போனார்
ஏற்ற காதல் என்னை பிரிந்து செல்ல
எனக்கு என்றவனாய் என் அருகே நீ நிற்க
விட்டு சென்றவர்களை நினைக்கும் என் மனம்
என்னை அணைக்கும் உன்னை ரசிக்காமல் போவதேனோ
விண்ணை பார்த்தபடி நான் கிடைக்க
என்னை அணைத்தபடி நீ இருக்க
இருளில் நிலவும் என்னிடம் பேசியதை உணர்ந்தேன்
கண்ணீர் மெல்ல விழியின் கறை உடைத்தது
மனமோ மெல்ல தன்னை தாழ் போட்டது
எங்கே அதன் வேதனை விழிகளை பாதிக்குமோ என்று
சொன்னால் தான் நான் அறிவேனா
உன் வலி எனதில்லையா என்று கண்ணீர் பெறுக
உனக்கு நான் இருப்பதை மறந்தாயோ என
இரு கரமும் கண்ணீர் துடைக்க
தனிமை எனக்கு தாலாட்டு பாடியது
நிஜமென நினைத்தவை காற்றில் கானலாய் கரைய
பிம்பங்கள் என்னில் பேசி மகிழ்ந்தது
என்றும் நிரந்தரமாய் உன்னுடன் நான்
-- என் இனிய தனிமையே