கோமாளி

நான் ஒரு கோமாளி
துன்பத்தில் இருக்கும்
மனிதர்களை
என்னுடைய வேடிக்கையான
பேச்சாலும், செயலாலும்
சிரிக்க வைத்து ரசிப்பேன்...!!

ஆனால்
என் வாழ்க்கையோ
என்னை துன்பத்தில்
தவிக்க வைத்து
வேடிக்கை பார்த்து
ரசிக்கின்றது ...!!

அழுகின்றவனை நினைத்து
சிரிப்பவன் கோமாளி
சிரிப்பவன் நிறைந்த இடத்தில்
அழுபவன் கோமாளி...!!

எழுதியவர் : கோவை சுபா (19-Oct-21, 1:44 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : komali
பார்வை : 144

மேலே