பட்டம்

பட்டம்.

பறக்கவிடு நீ
அவளை,
பறக்கட்டும் அவள்
பட்டம் போல்!
பறக்கவிடு உயரவே,
அன்பெனும் உன்
கயிற்றாலே.

பார்க்கட்டும் அவள்
உலகத்தை,
புரியட்டும் அவள்
மனிதர்களை.

உன்னிடமே
இறங்கி வருவாள்,
அன்பெனும் உன்
கயிற்றை பிடித்து.

அப்போது அவளை
நீ அணைத்துவிடு,
கட்டிவிடுவாள்
உன்னை தன்னுடன்,
அன்பேனும்
கயிற்றால்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (20-Oct-21, 8:38 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : pattam
பார்வை : 65

மேலே