காலத்தின்பாடம் -இராகுவின் மறுபதிப்பு

பிறப்பென்னும் வாய்வைப் பெற்றுக் கொண்டேன்
பிறந்த பயனை பெரிது முணர்ந்தேன்
இளமை காலம் இன்பங் கண்டது
வளமை வாழ்வை வகுத்து தந்தது
பெற்றவர் பிணைப்பு பெருமைக் கலந்து
உற்றக் காலத்தில் உயர்வை தந்தது
கல்வி கற்றேன்; கடிது ப் பெற்றேன்
நல்வினை யாற்ற நற்காலம் வந்தது
வாழ்வின் தொடக்கம் பணியினைப் பெற்றேன்
தொழுது வாணங்கினேன் தொடர்ந்து வாழ்வு
காலம் கனிந்தது கைப்பிடித்தான் இல்லானை
ஞால வாழ்வில் நடந்திடும் நாடகங்கள்
பிள்ளைகள் பெற்றேன் பெரிதும் வளர்த்தேன்
நல்ல நிலையில் பிள்ளைகள் வாழ்வு
ஓடி,ஓடி உரைந்து நின்று
ஆடி, ஆடி அழகிய காலங்கள்
மாறி,மாறி மலர்ந்து மனத்தில்
உணர்ந்து வந்தோர் உரிமை நிலையில்
உண்டு மகிழ்ந்தான் உயர்த்திப் போற்றினர்
காலமென்னும் நல்லாள் நடைதான்
கனிந்தப் பொருளும் கைவிட்டுப் போனது
முதுமை கண்டேன்; முழுமை அறிந்தேன்
வாழும் வாழ்வில் தனிமை யானேன்
வாழ்வும் சிறுகக் சிறுக,வானில்
கலையம் மேகம் போல, வாழ்ந்து
நிலையும் கலைந்து, கண்க ளிரண்டும்
மங்கி,மங்கி மாயம் நிலையில்
சுற்றிப் பார்த்தேன்; சூழ்ந்தன எவரும்
பற்றற்று பறந்தேடும்

பாச நிலையை கற்று உணர்ந்தேன் காலப் படத்திலே!

எழுதியவர் : இராகு.அரங்க (23-Oct-21, 1:27 pm)
பார்வை : 47

மேலே