புனைப்பெயர் தானே சூட்டல்
நேரிசை வெண்பா
இயற்பெயர் என்றது பெற்றோரி டும்பேர்
கயவர் புனைந்ததைத் தந்தார்--- பயனென்
இனத்தை மறைத்த லெதற்கென்று சொல்வீர்
தினமெத்த னைமறைப்பீ ரிங்கு
களிப்பாய் தருவீர் கருவின் இயற்பேர்
சுளிக்காத் தளத்தில் பழகு
கவிதை புனைவில் திறமை விளக்கு
பெயரிலே வேண்டாம்சொல் வேன்