தனிமையில் வாடும் அவள்

அன்றொரு நாள் இதே வசந்தகால மாலை
இன்பம்பொங்கும் பொன்னாள் அவனும் நானும்
மாடப்புறாக்களாய் காதல் பிணைப்பில்.....
எம்மையே மறந்து ஸ்வர்கத்தின் வாசலில் ....
.
இன்று அதே வசந்த நன்னாள் இன்பம் தரும்
வசந்த மாலை நேரம்..... ஆனால் தோழி
அவனோ இன்று என்னுடன் இல்லை உறவாட
ஏனோ ஒரு ஊடலில் என்னை விட்டு போய்விட்டான் ....
இன்று இந்த தென்றலும் தீண்டி என்னைத் தீக்குதே
என்செய்வேன் தனிமை என்னை நரகத்தின் வாசலில்
கொண்டு செய்வது போல் உணர்கிறேனடி நான்..

சொல்லடி தோழி வருவானா மீண்டும் என்னைத் தேடி
என்னவன் வாராது போனால் எஞ்சீவன்
என்னைவிட்டு அவனைத்தேடி போய்விடுமடி
தனிமைத்தீயில் வெந்திடும் நான் ,,,,,இப்படிக்கு

நான்....நான்.... உந்தன் தலைவி,,,,,இல்லைத் தோழி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (25-Oct-21, 1:28 pm)
பார்வை : 119

மேலே