இனிது

"விழி உனது, பார்வை எனது ,
மொழி உனது, வார்த்தை எனது,

மனம் உனது, வாசம் எனது,
நினைவு உனது, ஆசை எனது,

பருவம் உனது, பாசம் எனது,
உருவம் உனது, உரிமை எனது,

பாதை உனது, பயணம் எனது,
நேச விதை உனது,
பேசும் கனியோ எனது,

இதில் எது தான் இனி உனது?
அதுதான் இனி எனது,

இந்நிலை காதலுக்குரியது,
நிலைத்திருந்தால் என்றும்
இனிது. "

எழுதியவர் : (25-Oct-21, 11:45 am)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : inithu
பார்வை : 129

மேலே