விந்தையிலும் விந்தை மானிடனே

@@@@@@@@@@@@@@@@@@@@@@
வினாத்தாள் ஆகிறது நெஞ்சம்
விடையளிக்க முயலும் நானும்
விடைகள் முழுதும் அறியாமல்
விழிக்கின்ற நிலை எனக்கும் !
வினாடிவினா நிகழ்வல்ல வாழ்வு
வினாடிப் பொழுதில் விடையளிக்க
விடையறியா வினாவை ஓதுக்கிட
விழிக்கின்ற நிலையே எனக்கும் !
விடுகதை அல்லவே வாழ்க்கையும்
விடுக்கென பதிலைக் கூறுவதற்கு
விடையை உரைக்க அறியாமல்
விழிக்கின்ற நிலையே எனக்கும் !
விளக்கமல்ல வரிகளும் வாழ்விற்கு
விளக்கிடும் தகுதியில்லை எனக்கு
விளங்கிடா ஒருவனின் உள்ளமாக
விழித்திடும் நிலையே எனக்கும் !
விஞ்ஞானம் வளர்ந்தும் புவனத்தில்
விதியென்று விரக்தியில் புலம்புவது
விவேகமின்றி விதிகளை வகுப்பது
விந்தையிலும் விந்தை மானிடனே !
பழனி குமார்
@@@@@@@@@@@@@@@@@@@@@@