புண்ணிய பூமி
கற்க கசடற என்றார்கள்
நானும் கசடற கற்றேன்
ஆனால்...
நிற்பதற்கும்
நிலைப்பதற்கும்
இடம் தான் கிடைக்கவில்லை
இந்த புண்ணிய பூமியில் ...!!
கசடற கற்றவர்களுக்கு
உரிய மதிப்பும்
மரியாதையுமில்லை
இந்த புண்ணிய பூமியில் ..!!
கற்றவன் சொல்
அம்பலம் ஏறுவதில்லை
பணம் படைத்தவன் சொல்
தவறாக இருந்தாலும்
தண்டிக்கப்படுவதில்லை
இந்த புண்ணிய பூமியில் ...!!
பொய் பேசுபவர்கள்
பகட்டாக வாழ்கின்றார்கள்
மெய் பேசுபவர்கள்
வாழ்வதற்கு வழியில்லாமல்
வாழ்கின்றார்கள்
இந்த புண்ணிய பூமியில் ..!!
--கோவை சுபா