இந்த ஏழு நாட்கள்
திங்கள் இரவு ஒளிரும், அதுவரை நம்முடல் உழைத்து வேர்த்துவிடும்
திங்களன்று திங்கள் தென்படினும், கண்கள் அதை காண மறந்துவிடும்
செவ்வாய் அன்று அலுவலக பணிகளில் மும்முரமாக இறங்குவோம்
செவ்வாய் திறந்து காதலி மொழிந்தாலும் அவள் வாயை மூடுவோம்
புதன்கிழமை தான் எல்லா பணிகளுக்கும் மிகவும் பிடித்த பொன்னாள்
அதன் பிடியிலிருந்து ஒருவன் தப்பி சென்றால் அவன் மிக பெரிய ஆள்
வியாழன் வந்தால் நம் குருவை(உயர் அதிகாரியை) கும்பிட வேண்டும்
தோழன் அன்று வந்தாலும் நமக்கு அவன் காத்திருக்கத்தான் வேண்டும்
வெள்ளி முளைக்கும் ஒவ்வொரு காலையும் தனி ஒரு உற்சாகம் தான்
வெள்ளியன்று எவனும் சீட்டியடிப்பான் இருநாள் கொண்டாட்டம்தான்
சனி என்றால் பெருமாளுக்கும் சனி பகவானுக்கும் விசேஷமான நாள்
பூசணிகூட்டு காரசாரமாக அன்று வைத்தால் இவனுக்கு அமோக நாள்
ஞாயிறு உதித்து அதன் இதமான கதிர்கள் ஆகாயத்தில் ஒளிவிடினும்
ஞாயிறு அன்று அதன் கடுமையான கதிர்களே தூக்கத்தை கலைக்கும்
ஆனந்த ராம்