தமிழ்நாடு தின வாழ்த்துக்கள்
வில் அம்பின் விரைவு தன்மையும்
புலியின் சீரும் குணமும் மீன் போன்ற
துள்ளல் சுறுசுறுப்பும் ஒரு சேர அமைந்த
திமிரோடு வெகுண்டெழும்
சேர,சோழ,பாண்டியர் வழி வந்த
மூவேந்தர்களின் இனம் தமிழினம்
அவர்கள் வகுத்த பாதையில் பயணிப்போம்
அவர்கள் புகழ் குறையாமல் தமிழர்கள்
மரபு மாறாமல் தமிழால் அனைவரும்
இணைவோம் உழவை காப்போம்
உழைப்பால் உயர்வோம் உயர்ந்தவன்
தாழ்ந்தவன் இல்ல தமிழ் தேசத்தை
உருவாக்குவோம் உலகநாடுகளில்
தமிழ் ஓங்கட்டும் உயரட்டும் புகழ்
எட்டுத்திக்கும் பரவட்டும் அனைவருக்கும்
எனது தமிழ்நாடு தின வாழ்த்துக்கள்