தீப ஒளிபோல் நம் வாழ்வு மலரட்டும் தீபாவளியில்

திரு திரு என்று முழிக்காத நாளெல்லாம் திருநாள் தான்
அது தீபாவளி பண்டிகை என்றால் கொண்டாட்டம் தான்
பண்டிகை கொண்டாடி மகிழ காரணம் பல இருக்கலாம்
தீபாவளி அன்று எப்படியும் மிக இன்பமாக இருக்கலாம்
இந்நாள் பண்டிகைகளின் ராஜா என்றால் மிகையாகாது
இனிப்பை விரும்புவோருக்கு இது பொன்னான வாய்ப்பு
இனிப்பை வெறுக்கும் மனிதர்களுக்கு கட்டாய திணிப்பு
நாம் ரவாலட்டு செய்தால் பக்கத்து வீட்டில் குஞ்சாலட்டு
இங்கே நெய்மைசூர் பாகு எனில் அங்கே தேங்காய் பர்பி
சமயலறையில் கூட்டம் கூட்டமாக இனிய பலகாரங்கள்
தினமும் எண்ணெய் தடவினும் இன்று சிறப்பு எண்ணெய்
புத்தடைகளுக்கு கேட்கவேண்டுமா? புதுசு அதுவும் தினுசு
குடும்பத்துடன் கூட்டாக கூடி கூத்தாட மகிழ்ந்து உறவாட
நண்பர்களுடன் சேர்ந்து வண்ண பட்டாசுகளை கொளுத்த
ஆஹா, வருமா இது போன்ற இன்னொரு இன்ப திருநாள்?

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (3-Nov-21, 8:30 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 206

மேலே