காலை நேரக் கவிதை

விடிந்திடும் முன்னே வீட்டின்
முகப்பினில் அமர்ந்தேன்; நற்பா
படைத்திட வேண்டி! சிந்தை,
பக்குவப் படவே இல்லை!
படர்ந்தன வானம் மேலே
பரிதியின் ஒளியின் கைகள்!
கடிதினில் வந்தது எண்ணம்
கவிதனை எழுத லுற்றேன்.

எழுதியவர் : அ. முகிலன் (5-Nov-21, 6:54 pm)
சேர்த்தது : அ முகிலன்
பார்வை : 765

மேலே