ஹைக்கூ கவிஞர் இரா இரவி

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

விரைவில் அடங்கிவிபீடும்
பம்பரம் போன்று
ஆடம்பரம் !

பதவியை மதித்திடு
பதவியை இழந்தால்
மதிப்பதில்லை யாரும் !

அளவிற்கு மிஞ்சினால்
நஞ்சாகும்
உறக்கமும் !

ஓய்வு அறியாதவர்கள்
கடிகாரம்
சூரியன் !

உன்னுள் இருக்கும்
முதல் பகைவன்
கோபம் !

யோசித்துப் பேசினால்
வேண்டியதில்லை
பேசியபின் யோசிக்க !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (5-Nov-21, 8:57 pm)
பார்வை : 243

மேலே