அச்சம் இருக்கக் கூடாது
உயிரோடு ஒட்டி
உறவாடும் அச்சம்
ஒரு பாதி நம்பத்தகாதது
மறு பாதி ஆதாரமற்றது
அச்சம் எழுவது
அறியாமையால் தான்,
அச்சம் ஆபத்தை
இரட்டிப்பாக்கும்
அன்பு ஆட்சி செய்யும்
இடத்தில் அச்சம் இராது
தூய்மையான அன்பு
துரத்திவிடும் அச்சத்தை,
அச்சமின்மை
அறிவுக்கு ஆதாரம்
உயர் குணமுடையோரிடம்
உறவாடாது அச்சம்
தேவையில்லாம
போலீசைக் கண்டு
அச்சப்பட்டு நிம்மதியை
இழப்பது பரிதாபம்,
நோயை விடக்
கொடியது அச்சம்
அதனால் மனிதர்களை
அதிகம் கொல்வதும் அதுவே
அச்சத்தைக் கண்டு
அஞ்சி ஓடாமல்
அச்சத்தைத் தவிர்த்து
துணிந்து நின்று
போராடினால்
அச்சத்தை வெல்லலாம்,
கூச்சம் இருக்கலாம்
அச்சம் இருக்கக்கூடாது