திருவள்ளுவர் காலத்து பூசைகள்

வள்ளுவர் காலத்தில் தமிழர் கடவுளைத் தொழுதாரா ? தவம் மேற்கொள்ளப் பட்டதாjQuery171006007018030558253_1636465088627

ஆம் என்போர் ஆமென்க இல்லை என்போர் இல்லை என்க என்றிங்கு
சட்டசபை ஓட்டெடுப்பில்பதில் தருவது முறையல்ல.

அவர் எழுதியுள்ள க் குறளில் பூஜையை பற்றி எழுதியுள்ளார் என்பதைப் பாருங்கள்
பகுத்தறிவு கும்பலின் அடிவருடிகளே. கீழேயுள்ளதைப் படியுங்கள்

தமிழ் நாட்டில் முஸ்லீம் வெள்ளையன் ஆட்சியில் தமிழரை முறையாக சாமிகும்பிடக்
கூடாதென ஏதாவது ஒருசாக்குச் சொல்லி கிராமகளில் கடவுளைத தொழுதல், திருவிழா
எடுத்தல் போன்றவை குறைக்கப்பட்டுத் தடுத்து நிறுத்தப் பட்டுவிட்டது. தமிழ் நாட்டில்
சுதந்திரம் அடைந்து இருபது வருடம் நன்றாக தொழுகை செய்தோம். .பிறகு வந்த
பெரியாரின் அடிவருடிகள் கடவுளே இல்லை என்று கிண்டல் செய்து மனிதர்களை
மத மாற்ற முயற்சி யில் ஈடு பட்டு கடவுள் தொழுகைக்கு மதிப்பு கொடுக்காது தமிழ்
மரபையே மறைத்தார்கள். திருவள்ளுவர் பல இடங்களில் கடவுள் பூஜையை பற்றி சொல்லி
யுள்ளார். அதையெல்லாம் முழு பூசணிக்காயை சோற்றில்மறைப்பது போல மறைக்க
முயன்று வருகிறார்கள்.
10 குறளை கடவுள் வாழ்த்திற்கு ஒதுக்கிய திருவள்ளுவன் கடவுள் இல்லை என்று
நாக் கூசாது மறைக்கப் பார்க்கிறார்கள்..

திருக்குறள் எண். 18.

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈணடு


பூமியில் உள்ளவர்கள்தவறாமல் , வானுலக தெய்வங்களுக்கு , தினமும் ஆறு காலப்
பூஜைகளும் நெய்விளக்கு அபிஷேகங்கள் ஆராதனைகளும் நடக்கிறது என்பதை
ஒருசிறிய 1 3/4 அடிக் குறளில் அழகாக விளக்கியுள்ளது ஆனால் வள்ளுவனைப்
புகழும் கழகத்தாரின் கண்களுக்குப் இக்குறள் படமலா இருந்திருக்கும்?. இருப்பினும்
கண்டும் காணாதது மறைக்கிறார்கள்.

வானம் பூமியின்மேல் மழைப்பொழியாது பூமியை வரண்டுபோக விடுமானால், தமிழர்கள்
தவறாமல் பூமியின் மேல் வானவர் (தெய்வங்களுக்கு) செய்யும் பூசைகள், அதுவும்
சிறப்பான பூசைகள் நடத்த முடியாது அழிந்து போகும் என்று வள்ளுவன் மழையின்
சிறப்பைப் பாடவந்தவர் தமிழரின் பூசையைபற்றி க் குறிப்பிடுவதை காணுங்கள்.
இதிலிருந்து தமிழர்கள் வானுறை தெய்வங்களிக்குத் தவறாது பூஜை செய்தார்கள்
என்பது வள்ளுவன் வாயால் வந்த பெருங்குறிப்பு ஆகும்.

மேலும் தமிழர்கள் அன்று அறுவகை சமயத்தாராக , இருந்து விரும்பிய இந்துக் கடவுளரைத் தொழுதனர். அவை. 1;சிவனைத் தொழல். 2. சாக்தம். சக்தியைத் தொழல் 3. கௌமாரம் குமரனை வழி படுத்தல் 4. கணாபத்யம். கணபதியைத் தொழுதல். 5.வைஷ்ணவம் மாலவனைத் தொழுதல். 6 சாக்கியம். சூரியனைத் தொழுதல் . ஆகும். சமணம் பௌத்தம் என்பதும் பாரத தேசத்தில் தோன்றியதாயினும் ஷீனித்துக் குறைந்து போனது.

அறுவகை சமயம் இங்கு இருந்தமையால் வள்ளுவன் பொதுவாக கடவுளின் பெயரை
விடுத்து பூசையைப் பற்றி மட்டும் குறிப்பிட்டு எழுதி யுள்ளார்.


இதைப்போலவே மழையின் முக்கியத்தைக் கூற வந்த வள்ளுவன்
.
திருக்குறள் 19

தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்
வானம் வழங்காது எனின்

தாங்கள் எண்ணிக் கொண்டு சேர இருக்கும் கடைசி உலகம் வானுலகம் போக தவமிருக்க
வேண்டுமானால் மழை பொழிய தானம் நடக்கும் தவமும் சிறப்பாய் முடியும் கடைசியாக
பேரின்ப வீடும் கிடைக்கும்.மழை பெய்து உதவாவிட்டால், இந்தப் பரந்த உலகத்தில்
பிறருக்காகச் செய்யப்படும் தானமும், தனக்காக மேற்கொள்ளும் தவமும் இரண்டும்
நிலையாமற் போய்விடும்.

அறத்தின் படி வாழும் இல்லறத் தலைவன் தினமும் தானம் செய்ய வேண்டும் என்று
நால்வகை தவசிகளையும் உபசரித்து அன்னமிடல் வேண்டும் என்று என்றும்
இது தமிழரின் கலாச்சாரம் என்று உணர்த்துகிறார் பாருங்கள். வள்ளுவர் காலத்தில்
தவசிகளும் அவர்களை தவறாது போஷிப்பவர்களும் தவறாது கடவுளைப் பூசை செய்வதும்
தமிழரின் கலாச்சாரம் என்பதை இக்குறளின் வாயிலாக நமக்கு வள்ளுவன் சொல்லியுள்ளார்

எழுதியவர் : பழனி ராஜன் (9-Nov-21, 7:07 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 50

சிறந்த கட்டுரைகள்

மேலே